சிச்சுவான் மாநிலத்தில் நிகழ்ந்த நிலநடுக்கம்
2022-06-02 16:40:10

ஜூன் முதல் நாள் மாலை 5:00 மணியளவில், சிச்சுவான் மாநிலத்திலுள்ள யான் அன் நகரின் லூஷன் மாவட்டத்தில் ரிக்டர் அளவுகோலில் 6.1ஆகப் பதிவான நிலநடுக்கம் நிகழ்ந்தது. 17:03 மணியளவில், போக்சிங் மாவட்டத்தில் ரிக்டர் அளவுகோலில் 4.5ஆகப் பதிவான நிலநடுக்கம் நிகழ்ந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 14 காயமடைந்தனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு, மீட்பு பணிகளை உள்ளூர் அரசு துரிதமாக மேற்கொண்டு வருகின்றது. காணாமல் போனவர்களைத் தேடுதல், காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்தல், மக்களை பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லுதல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரு மாவட்டங்களுக்கு நிவாரண நிதியாக தலா 5 கோடி யுவான் சிச்சுவான் மாநிலத்தின் நிதி அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.