உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவல்
2022-06-02 15:10:00

உலகச் சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் ஜுன் முதல் நாள் கூறுகையில், முன்பு குரங்கு அம்மை நோய் பரவல் இல்லாத 30 நாடுகளில், 550க்கும் மேலான நபர்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோய் கண்டறியப்பட்டாத நிலையில் பல நாட்களாகப் பரவும் வாய்ப்புண்டு என்றார்.

இந்நோயால் பாதிக்கப்பட்ட நாடுகள் கண்காணிப்பின் அளவை விரிவாக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்ததோடு, எதிர்காலத்தில் மேலதிக குரங்கு அம்மை நோயாளிகள் கண்டறியப்படக்கூடும் என்றும் தெரிவித்தார்.