நிதானமான சீன அந்நிய செலாவணிச் சந்தை
2022-06-02 19:05:54

சீனாவின் அந்நிய செலாவணிச் சந்தை அடிப்படையில் நிதானத்தை நிலைநிறுத்தி, உறுதியான நெகிழ்வுத்தன்மையைக் காட்டியுள்ளது. ரென்மிபி மாற்று விகிதமும் ஒட்டுமொத்தமாக நியாயமான மற்றும் சீரான அளவில் இருக்கின்றது என்று சீன மக்கள் வங்கியின் துணைத் தலைவரும் சீனத் தேசிய அந்நிய செலாவணிப் பணியகத்தின் தலைவருமான பான் கோங்ஷெங் ஜூன் 2ஆம் நாள் தெரிவித்தார்.  

பொருளாதார அதிகரிப்பை நிலைநிறுத்தும் விதம் மத்திய மற்றும் உள்ளூர் கொள்கைகள் படிப்படியாக பங்காற்றுவதுடன், சீனப் பொருளாதாரம் தொடர்ந்து மீட்சி அடைந்து வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.