கிராமப்புற வளர்ச்சிக்குத் துணைப் புரியும் வாத்து முட்டை தொழில்
2022-06-02 11:50:25

சீனப் பாரம்பரிய டிராகன் படகு விழாவை முன்னிட்டு, ஜியாங்சூ மாநிலத்தின் காவ்யூ நகரைச் சேர்ந்த 100க்கும் மேலான வாத்து முட்டை தொழில் நிறுவனங்கள் சந்தையின் தேவைக்கிணங்க சுறுசுறுப்பாக உற்பத்திச் செய்து வருகின்றன. இந்நகரின் வாத்து முட்டைகள் மிகவும் புகழ்பெற்றவை. கடந்த சில ஆண்டுகளாக, இத்தொழிலின் மூலம் சுமார் 30 ஆயிரம் உள்ளூர் விவசாயக் குடும்பங்களின் வருமானம் அதிகரித்துள்ளது.