சீனாவின் புதுப்பிக்கவல்ல எரியாற்றல் வளர்ச்சித் திட்ட வரைவு வெளியீடு
2022-06-02 11:14:17

14ஆவது ஐந்தாண்டு திட்டக்காலம், கான்பன் உச்சநிலையை சீனா எட்டுவதற்கு மிக முக்கியமான காலக்கட்டமாகும். இந்நிலையில், 14ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் புதுப்பிக்கவல்ல எரியாற்றல் வளர்ச்சித் திட்டவரைவு ஜுன் முதல் நாள் வெளியிடப்பட்டது. இக்காலத்தில் சீனாவின் புதுப்பிக்கவல்ல எரியாற்றல் வளர்ச்சியின் இலக்கு, முக்கிய கடமைகள் மற்றும் உத்தரவாத நடவடிக்கைகள் இதில் முன்வைக்கப்பட்டுள்ளன.

2025ஆம் ஆண்டு வரை, புதுப்பிக்கவல்ல எரியாற்றலின் மொத்த நுகர்வு அளவு 100 கோடி டன் நிலக்கரிக்குச் சமமாக இருந்து, புதுப்பிக்க முடியாத எரியாற்றலின் நுகர்வில் சுமார் 18 விழுக்காடு வகிக்க வேண்டும். அதன் நுகர்வு அதிகரிப்பு, புதுப்பிக்க முடியாத எரியாற்றலின் நுகர்வு அதிகரிப்பில், 50 விழுக்காட்டுக்கு மேலாக இருக்க வேண்டும் என்று இத்திட்டவரைவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், தரையிலுள்ள 9 புதுப்பிக்கவல்ல எரியாற்றல் தளங்கள், கடற்பரப்பிலுள்ள 5 காற்றாற்றல் தொகுதிகள் ஆகியவற்றின் கட்டுமானத்தை விரைவுபடுத்தி, புதுப்பிக்கவல்ல எரியாற்றலின் உயர் தர வளர்ச்சிக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் இதில் முன்வைக்கப்பட்டுள்ளது.

தவிரவும், கிராமப்புறங்களிலுள்ள எரியாற்றல், கிராமப்புற வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாகும். 14ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில், கிராமப்புற புதுப்பிக்கவல்ல எரியாற்றலின் வளர்ச்சியை சீனா பெரும் முயற்சியுடன் முன்னேற்றி, அதனை அடிப்படையாகக் கொண்ட தூய்மையான எரியாற்றல் பயன்பாட்டு முறைமையின் கட்டுமானத்தை விரைவுபடுத்தி, கிராமப்புற வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் என்றும் இத்திட்டவரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.