ஒரு ஏவூர்தியில் 9 செயற்கைக் கோள்கள் ஏவுதல் வெற்றி
2022-06-02 15:20:22

சீனாவின் ஷிசாங் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து லாமார்ச்-2சி ஏவூர்தி மூலம் ஜீலி-01 விண்மீன் தொகுதியைச் சேர்ந்த 9 செயற்கைக் கோள்கள் ஜுன் 2ஆம் நாள் நண்பகல் 12 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு, திட்டமிடப்பட்ட சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

நுண்மதி இணைய வாகனங்களின் எதிர்கால பயணச் சேவைக்கும், வாகனம் அல்லது கைப்பேசிக்கும் செயற்கைக் கேளுக்கும் இடையேயான தொடர்பு உள்ளிட்ட தொழில் நுட்ப ஆய்வு மற்றும் சோதனைக்கும் இந்தச் செயற்கைக் கோள்கள் முக்கியமாகப் பயன்படுத்தப்படும். கடல் சூழ்நிலை பாதுகாப்பு தொடர்பான பொது நல நடவடிக்கைகளுக்கும் அவை ஆதரவாக அமையும்.