கச்சா எண்ணெய் உற்பத்தித் தொகை அதிகரிப்பு
2022-06-03 17:12:52

ஒபெக் அமைப்பைச் சேர்ந்த பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள்  மற்றும் இதர பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் 29வது அமைச்சர்கள் கூட்டம் காணொலி வழியில்  ஜூன் 2ஆம் நாள் நடைபெற்றது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில், உற்பத்தி நாளுக்கு 6 லட்சத்து 48 ஆயிரம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அண்மையில், ரஷிய-உக்ரைன் மோதல், ரஷியாவின் மீதான மேலை நாடுகளின் தடை ஆகியவற்றின் காரணங்களாக, சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில், ஒவ்வொரு பீப்பாயின் விலை, சுமார் 110 அமெரிக்க டாலர். எண்ணெய் விலையை நிலைப்படுத்தவும் பணவீக்கத்தைக் குறைக்கவும் உற்பத்தி அளவை அதிகரிக்குமாறு முக்கிய எண்ணெய் நுகர்வு நாடுகள் பல முறை வேண்டுகோள் விடுத்தன.