தைவான் நீரிணை அமைதியைப் பாதிக்கும் அமெரிக்க செயல்
2022-06-03 17:08:57

அமெரிக்கத் துணை வர்த்தகப் பிரதிநிதி பியாஞ்சி சீனத் தைவானின் பிரதிநிதியுடன் ஜுன் முதல் நாள் இணைய வழியாக சந்திப்பு நடத்தி, கூறப்படும் 21ஆவது நூற்றண்டு வர்த்தக முன்மொழிவை வெளியிட்டார்.

இத்திட்டத்தின்படி, எண்ணியல் வர்த்தகம், சுங்க நடைமுறைகள் மற்றும் வர்த்தக வசதி, சீர்கேட்டை நீக்குதல் முதலிய துறைகளில் இரு தரப்புகள் ஒத்துழைப்பு மேற்கொள்ளும். ஆனால், பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் என்ற பெயரில் அமெரிக்காவும் தைவானும் அரங்கேற்றிய இன்னொரு அரசியல் கேலிக்கூத்து இதுவாகும். சீனாவை அடக்குவது அவற்றின் உண்மை நோக்கமாகும்.

சீன-அமெரிக்க 3 கூட்டறிக்கைகளின்படி, உலகில் ஒரே சீனா என்பதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது. தவிரவும், தைவானுடன் பண்பாடு, வணிகம் உள்பட அதிகாரப்பூர்வமற்ற துறைகளில் மட்டும் தொடர்பு கொள்வோம் என்ற வாக்குறுதியையும் அமெரிக்கா அளித்துள்ளது.

இருந்தபோதிலும், சீனாவுடன் தொடர்புடைய கொள்கை பற்றி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் அண்மையில் நிகழ்த்திய உரையில் தைவான் தனது சர்வதேச தகுநிலையை விரிவாக்குவதற்கு வெளிப்படையாக ஆதரவு அளித்தார். தைவானில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பயணம் மேற்கொண்டனர். நடைமுறையில் தைவான் நீரிணை அமைதியைப் பாதிப்பதில் அமெரிக்கா முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.