பிரிக்ஸ் நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பு
2022-06-03 17:12:18

பிரிக்ஸ் நாடுகளின் கட்டுக்கோப்பின் கீழ் நடைபெறும் கூட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளைச் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சாவ் லிஜியன் ஜூன் 2ஆம் நாள் அறிமுகப்படுத்தினார்.

அண்மையில், பிரிக்ஸ் நாடுகளின் தொழில்துறை அமைச்சர்கள் கூட்டம், பண்பாட்டு அமைச்சர்கள் கூட்டம், விண்வெளி ஒத்துழைப்புக்கான கூட்டுக் குழுவின் முதல் கூட்டம், கல்வி அமைச்சர்கள் கூட்டம் முதலியவை சமீபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றன.

இவ்வாண்டின் பிரிக்ஸ் நடப்புத் தலைவர் பதவி வகிக்கும் சீனா, இவ்வாண்டில் பிரிக்ஸ் கட்டுக்கோப்பின் கீழ் பல கூட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை நடத்தி, பல்வேறு துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கு ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றவுள்ளது என்று சாவ் லிஜியன் கூறினார்.