கனடாவில் 77 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு
2022-06-04 16:09:03

கனடாவில் 58 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் முதன்மை பொதுச் சுகாதார அதிகாரி திரேசா தாம் ஜுன் 3ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து,  அந்நாட்டின் கியூபெக் மாகாணத்தில் புதிதாக 19 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்  என்று கியூபெக் சுகாதாரத் துறை புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனடாவில் மொத்தம் 77 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.