ஏற்றுமதியில் ரூபிள் மூலமான பரிவர்த்தனை முறையை விரிவாக்க சாத்தியம் உண்டு - ரஷியா
2022-06-04 16:39:08

மேற்கத்திய நாடுகள் சர்வதேச நிதி துறையில் தனது தகுநிலையைத் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தி வருவதால், சரக்கு ஏற்றுமதியில் ரூபிள் மூலமான பணப் பரிவர்த்தனை முறையை விரிவாக்க நேரிட வாய்ப்புள்ளது என்று  ரஷியா கூறியுள்ளது. 

அந்நாட்டின் முக்கிய ஒத்துழைப்புக் கூட்டாளிகளுடனான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவில் ரூபிள் பங்கீட்டை உயர்த்தவுள்ளதாகவும் ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விளாடிமிரோவ்னா ஜகரோவா 3ஆம் நாள் தெரிவித்தார்.

மே 31ஆம் நாள் வரை, இயற்கை வாயுக் கட்டணம் செலுத்தாத மற்றும் ரூபிள் மூலமான பரிவர்த்தனை முறையை மறுத்த போலந்து, பல்கேரியா, பின்லாந்து, நெதர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு இயற்கை வாயு விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷிய காஸ்ப்ரோம் நிறுவனம் அறிவித்துள்ளது.