சீனாவில் இருந்து முதற்கட்ட மருந்துகள் இலங்கைக்கு ஒப்படைப்பு
2022-06-04 16:15:49

இலங்கை அரசுக்கு சீனா உதவியாக அளிக்கும் முதற்கட்ட மருந்துகள், ஜுன் 3ஆம் நாள் கொழும்புக்கு ஏற்றுச்செல்லப்பட்டது. 3ஆம் நாள் இரவில், ஒரு கோடி யுவான் மதிப்புள்ள இந்த மருந்துகள், அந்நாட்டு விமான நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்துப் பொருட்கள்,  சீனா இலங்கைக்கு அளிக்கும் 50 கோடி யுவான் மதிப்புள்ள அவசர மனிதநேய உதவிப் பொருட்களில் ஒரு பகுதியாகும். அடுத்த கட்டம், மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள், உணவு தானியங்கள் மற்றும் வேறு அத்தியாவசியப் பொருட்கள் உள்பட உதவி பொருட்கள் அனுப்பப்படும் என்று இலங்கையிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.