அமெரிக்காவில் மீண்டும் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி
2022-06-05 16:55:58

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் ஃபிலடெல்பியா நகரத்தில் ஜுன் 4ஆம் நாள் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில், 3 பேர் உயிரிழந்தனர், குறைந்தது 11 பேர் காயமடைந்தனர்.

4ஆம் நாளிரவில், ஃபிலடெல்பியா நகரத்தின் மையத்தில் ஆண் ஒருவர் மக்கள் கூட்டம் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை சுட்டு விட்டனர் என்று உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.