இயற்கைக்காக குரல் கொடுக்கும் சீன-ஆப்பிரிக்க செய்தி ஊடகங்களின் நடவடிக்கை
2022-06-05 17:04:47

ஜூன் 5ஆம் நாள் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சீன-ஆப்பிரிக்க செய்தி ஊடகங்களின் நடவடிக்கை என்ற நிகழ்ச்சி கென்யா தலைநகரான நைரோபியில் துவங்கியது. இந்த நிகழ்ச்சி சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த ஆப்பிரிக்க நிலையத்தின் தலைமையில் நடந்துள்ளது. இயற்கைக்காக குரல் கொடுப்பதென்ற தலைப்பைக் கொண்ட இந்நிகழ்ச்சி, ஆப்பிரிக்க செய்தி ஊடங்களுடன் இணைந்து சுற்றுசூழல் பாதுகாப்பு பற்றிய பரப்புரையை வலுப்படுத்தி பசுமைசார் வளர்ச்சி வாய்ப்புகளை பகிர்ந்து கொள்வதை முன்னேற்றவுள்ளது.