வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து
2022-06-05 17:01:32

வங்காளதேசத்தின் சிட்டகாங் மாவட்டத்தில் உள்ள  கொள்கலன்  சேமிப்புக் கிடங்கு ஒன்றில் 4ஆம் நாளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மேலும் அங்கு வெடி விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் இது வரை, 5 தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 38 பேர் உயிரிழந்தனர், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்  என அஞ்சப்படுகிறது

தகவல் அறிந்ததை அடுத்து காவல்துறையினர்களும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். மேலும் அந்நாட்டின் ராணுவ மீட்புதவி குழு ஒன்று விபத்து நடந்த இடத்தை சென்றடைந்து தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தெரியவில்லை.