ஷாங்காயில் இயல்புக்கு திரும்புகிறது சரக்கு விமானச் சேவை
2022-06-05 16:13:35

சீனாவின் ஷாங்காயில் வாழ்க்கை மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. இதில், டிராகன் படகு விழாவின் 3 நாள் விடுமுறையில், ஷாங்காய் புடொங் விமான நிலையத்தில், கிட்டத்தட்ட 600 சரக்கு மற்றும் அஞ்சல் விமானங்கள் வந்துச் சென்றுள்ளன. தினசரி 200 விமானங்கள் இயங்கி வருவதோடு, சரக்கு மற்றும் அஞ்சல் விமானச் சேவை இயல்பு நிலைக்கு திரும்புகிறது.

உலகின் முன்னணி 3 இடத்திலும் சீனாவின் முதல் இடத்திலும் சர்வதேச சரக்கு விமான  மையமாக, ஷாங்காய் புடொங் சர்வதேச விமான நிலையம் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.