சந்தையை நிதானப்படுத்தும் சீனக் கொள்கைகள்
2022-06-06 10:24:43

சீனாவில் வறுமையிலிருந்து விடுபட்டுள்ள மக்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும் விதம் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாண்டு வறுமையில் இருந்து விடுபட்டுள்ள மக்களுக்கு 3 கோடிக்கு அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்கும் இலக்கு நிறைவு செய்யப்படும் என்று சீனத் தேசிய கிராமப்புறங்களை புத்துயிரூட்டும் பணியகத்தின் தலைவர் லியு ஹுவான்சின் தெரிவித்தார்.

சந்தையை நிதானப்படுத்துவதற்கு, வேலை வாய்ப்புகளை நிதானப்படுத்துவது முக்கியம். இவ்வாண்டு முதல், வரிச் சலுகை, தொடர்புடைய தொழில் நிறுவனங்களுக்கான கட்டண வசூலிப்பைக் குறைப்பது, நிதி ஆதரவு முதலிய சலுகைக் கொள்கைகளை அரசு வெளியிட்டுள்ளது.