பள்ளியில் துப்பாக்கிச் சூடு---கவலை
2022-06-06 15:52:27

அமெரிக்காவில் இரு வாரங்களுக்கு முன்பு ரோபு துவக்கப் பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர்.  கொலம்பியா ஒளிபரப்பு நிறுவனம் வெளியிட்ட புதிய ஆய்வு முடிவின்படி, பள்ளிகளில் நிகழும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் கவலை அளிப்பதாய் உள்ளது என்று 72 விழுக்காட்டு பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர். குழந்தைகளை வருத்தம் அடையச் செய்துள்ளது என்று 63 விழுக்காட்டினரும், குழந்தைகள் பயப்படுகின்றனர் என்று 52 விழுக்காட்டினரும் தெரிவித்துள்ளனர்.