உத்தரக்கண்ட் மாநிலத்தில் பேருந்து விபத்து
2022-06-06 10:46:22

இந்திய உத்தரக்கண்ட் மாநிலத்தில் 5ஆம் நாள் ஒரு பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தபட்சம் 25 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். தற்போது விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. காயமுற்றோர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, சமூக ஊடகத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கலைத் தெரிவித்ததோடு, அவர்களின் குடும்பங்களுக்கும் காயமுற்றோருக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1.5 இலட்சம் பேர், பல்வேறு சாலை விபத்துகளில் உயிரிழந்து வருகின்றனர் என்று புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டது.