பசிபிக் தீவு நாடுகளின் தலைவர்களுடன் வாங்யீ சந்திப்பு
2022-06-06 10:10:27

தென் பசிபிக் தீவு நாடுகளில் பயணம் மேற்கொண்ட பிறகு சீன அரசவையின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ ஜுன் 5ஆம் நாள் செய்தியாளருக்குப் பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில்,

பசிபிக் தீவு நாடுகள், வளரும் நாடுகளின் முக்கிய உறுப்பினர்களாகும். 2014ஆம் ஆண்டிலும், 2018 ஆண்டிலும் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சீனாவுடன் தூதாண்மையுறவு நிறுவிய நாடுகளின் தலைவர்களுடன் கூட்டு சந்திப்பு நடத்தினார். இருதரப்பு உறவு, ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளித்து, கூட்டாக வளரும் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளிப்பது, தீவு நாடுகளுடனான உறவை வளர்க்கும் சீனாவின் அடிப்படைக் கோட்பாடாகும். கூட்டு வளர்ச்சி, தீவு நாடுகளுடன் ஒத்துழைப்பு மேற்கொள்ளும் சீனாவின் அடிப்படை இலக்காகும். தீவு நாடுகளுடன் ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த சீனா விரும்புகின்றது. தீவு நாடுகளின் வளர்ச்சியில் நம்பத்தக்க கூட்டாளியாக சீனா எப்போதுமே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.