தியன்சோ சரக்கு விண்கலத்தை அடைந்த சீன விண்வெளி வீரர்கள்
2022-06-06 13:39:08

சீனாவின ஷென்சோ-14 விண்கலத்தில் சென்ற மூன்று விண்வெளி வீர்ர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை தியன்ஹே மையத் தொகுதிக்குள் நுழைந்து, பின்னர் ஜுன் 6ஆம் நாள் 12:19 மணிக்கு வெற்றிகரமாக தியன்சோ-4 சரக்கு விண்கலத்துக்குள் சென்றனர்.

அடுத்து, இந்த குழு தியன்சோ-3 சரக்கு விண்கலத்துக்குச் செல்லும்.

திட்டப்படி, விண்வெளி நிலையக் கட்டுமானப் பணிக்காக இவர்கள் ஆறு மாத காலம் விண்வெளி நிலையத்தில் தங்கி பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்வர்.