அறிவியல் தொழில் நுட்பத் துறையில் சீனாவின் சாதனைகள்
2022-06-06 14:53:45

 “கடந்த 10 ஆண்டுகளில் சீனா” என்ற தலைப்பிலான செய்தியாளர் கூட்டத்தை ஜுன் 6ஆம் நாள் காலை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பரப்புரை துறை நடத்தியது.

இதில், சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் வாங் ச்சிகாங் கூறுகையில், திறப்புப் பணியின் விரிவாக்கத்தை சீனா தொடர்ந்து மேற்கொண்டு, சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கு பல்வேறு நிலைகள் மற்றும் பரந்துபட்ட துறைகள் கொண்ட புதிய அமைப்புமுறையை உருவாக்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக, ஒன்றுகொன்று நலன் தந்து திறப்பு மற்றும் சகிப்பு கொண்ட சர்வதேச ஒத்துழைப்புத் திட்டப்பணியை மேற்கொண்டுள்ள சீனாவுக்கும், 161 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கும் இடையே அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஒத்துழைப்புகள் சீராக வளர்ந்து வருகின்றன. மேலும், காலநிலை, உணவுப் பாதுகாப்பு, உடல் நலம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு நாடுகளுடனான கூட்டு ஆய்வுகள் பெரும் சாதனைகளைப் பெற்றுள்ளன. எதிர்காலத்தில், மேலும் அதிக நாடுகளுடன் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, உலக அறிவியல் தொழில் நுட்பத்தின் முன்னேற்றத்துக்கும் தொடரவல்ல வளர்ச்சிக்கும் மேலும் அதிக பங்காற்ற சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.