மன்ரோ கோட்பாட்டுக்கு வரவேற்பு இல்லை
2022-06-07 10:39:30

9ஆவது அமெரிக்க கண்ட உச்சி மாநாடு ஜுன் 6ஆம் நாள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் துவங்கியது.

ஜனநாயகப் பிரச்சினை காரணமாக, கியூபா, வெனிசுலா, நிகரகுவா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க மாட்டோம் என்று கடந்த ஏப்ரலில் அமெரிக்க நாடாளுமன்றம் தெரிவித்தது. இதற்கு லத்தின் அமெரிக்க நாடுகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன.

அமெரிக்காவில் நடைபெறும் உச்சி மாநாடு அமெரிக்க கண்ட உச்சி மாநாடா அல்லது அமெரிக்க உச்சி மாநாடா என்பது குறித்து பல லத்தின் அமெரிக்க நாடுகள் கேள்வியை எழுப்பியுள்ளன.

அமெரிக்க கண்ட உச்சி மாநாட்டை வாய்ப்பாகக் கொண்டு, தனது கட்டளைகளை ஏற்காத லத்தின் அமெரிக்க நாடுகளை அடக்க அமெரிக்கா முயல்கிறது. மன்ரோ கோட்பாட்டில் அமெரிக்கா தொடர்ந்து ஊன்றி நிற்பதற்கு இது புதிய எடுத்துக்காட்டாகும்.

அமெரிக்கா, இவ்வுச்சி மாநாட்டைப் பயன்படுத்தி தனது மேலாதிக்கத்தை வலுப்படுத்துவதாக மெக்சிகோ இபிலியா அமெரிக்க கண்ட பல்கலைக்கழகத்தின் சர்வதேச பிரச்சினை நிபுணர் லெயெஸ் குற்றஞ்சாட்டினார்.