பொருளாதாரம் மீது பெரும்பாலான அமெரிக்க மக்கள் நம்பிக்கையின்மை
2022-06-07 18:08:25

அமெரிக்க செய்தி ஊடகம் 6ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்காவில் சராசரி பெட்ரோல் விலை கடந்த 7 வாரங்களில் தொடர்ச்சியாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது. தொடர்ச்சியாக அதிகரித்த பெட்ரோல் விலை பொருளாதாரம் மீதான அமெரிக்கர்களின் நம்பிக்கையை மேலும் பாதித்துள்ளது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் தேசிய மக்கள் கருத்து கணிப்பு ஆய்வு மையம் 6ஆம் நாள் கூட்டாக வெளியிட்ட புதிய மக்கள் கருத்து கணிப்பின்படி, அமெரிக்காவின் தற்போதைய பொருளாதாரம் மோசமாக அல்லது நன்றாக இல்லை என்று கணிப்பில் பங்கேற்ற 83விழுக்காட்டினர் கருதுகின்றனர்.

பொருளாதாரம் மட்டுமல்ல, அமெரிக்க அரசியல் கட்சிகளிடையில் பிரிவினை, தேசிய ஒற்றுமை உள்ளிட்ட பிரச்சினைகளிலும், அமெரிக்க மக்களிடையே நம்பிக்கையின்மை ஏற்பட்டு வருகிறது.