சின்ஜியாங் பிரச்சினை தொடர்பாக பொய் கூறி வரும் அமெரிக்கா
2022-06-07 10:56:38

சீனாவின் சின்ஜியாங் பிரதேசத்தில் இன ஒழிப்பு நடத்தப்பட்டது என்பது, அமெரிக்க அரசியல்வாதிகள் வேண்டுமென்றே கூறி வரும் பொய்யாகும். அமெரிக்காவின் பொய் தூதாண்மையின் உருமாதிரியான படைப்பு இது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ச்சாவ் லீ ச்சியன், சின்ஜியாங் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளின் கூற்று குறித்து தெரிவித்தார்.

குவாங் ச்சோ மாநகருக்கான அமெரிக்கத் துணை நிலை தூதர் லீச கே ஹெலர் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு விருந்தில் கூறுகையில், சின்ஜியாங்கில் கட்டாய உழைப்பு, இன ஒழிப்பு மற்றும் மனித உரிமை மீறல் ஆகிய பிரச்சினைகள் உள்ளன என்று பரப்புவது, பயனுள்ள அரசியல் வழிமுறையாகும். இதனை அமெரிக்க வணிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சீன அரசை, நெருக்கடியில் முற்றிலும் சிக்க வைப்பதே, இதன் இறுதி நோக்கமாகும் என்று குறிப்பிட்டார்.