சீனாவில் 136 கோடி மக்கள் சேர்க்கப்பட்டுள்ள மருத்துவக் காப்புறுதி தகவல் தளம்
2022-06-07 10:47:17

சீன ஒருங்கிணைந்த மருத்துவக் காப்புறுதி தகவல் தளம் அண்மையில்  உருவாக்கப்பட்டது. இது. உலகளவில் மிகப் பெரிய அடிப்படை மருத்துவக் காப்புறுதி வலைப்பின்னலாக மாறியுள்ளது. சுமார் 4 லட்சம் மருத்துவமனைகளும், 4 லட்சம் மருந்துக் கடைகளும் இணைக்கப்பட்டுள்ள இத்தளம், மருத்துவக் காப்புறுதியில் சேர்ந்துள்ள 136 கோடி மக்களுக்குத் தரமான சேவைகளை வழங்க முடியும். வெளியூரில் மருத்துவச் சிகிச்சைக்கான கட்டணம், கட்டணம் செலுத்தும் முறையில் சீர்திருத்தம், மருத்துவக் காப்புறுதி கண்காணிப்பு, மருந்துகளின் கொள்வனவு உள்ளிட்ட துறைகளிலும் இத்தளம் பங்காற்றி வருகிறது.

சீராக இயங்கி வரும் இத்தளத்தின் மூலம், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் ஒருவரின் கட்டணம் செலுத்துதல் சுமார் 0.8 வினாடியில் நிறைவேற்றப்படும். மருத்துவச் சேவை முறைமையின் நிர்வாகம் மற்றும் செயல்திறன் இதனால் அதிகரித்துள்ளது.

மேலும், குறிப்பிட்ட விதிமுறையின்படி, வெளிநாட்டவர்கள் சீனாவில் மருத்துவக் காப்புறுதியில் சேர்ந்தால், சீனர்களைப் போலவே, ஒரேமாதிரியான அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.