ஹாங்காங்கில் 7 கண்காட்சிகளுக்கு அரண்மனை அருங்காட்சியகம் தயார்
2022-06-08 15:58:33

ஹாங்காங்குடனான பண்பாட்டுப் பரிமாற்றத்தை முன்னெடுக்கும் வகையில், சீன அரண்மனை அருங்காட்சியகம், ஹாங்காங் அரண்மனை பண்பாட்டு அருங்காட்சியகம் ஆகியவை ஜுலை திங்கள் கூட்டாக 7 கண்காட்சிகளை நடத்தவுள்ளன.

இந்தக் கண்காட்சிகள் ஜுலை 2ஆம் நாள் முதல் பொது மக்களுக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்படும். அரண்மனை அருங்காட்சியகத்தின் 900 அரிய தொல் பொருட்களில் 70 விழுக்காட்டுப் பொருட்கள், முதன்முறையாக ஹாங்காங்கில் காட்சிக்கு வைக்கப்படும். இக்கண்காட்சிகளுக்கான ஆயத்தப் பணிகளை, சீன அரண்மனை அருங்காட்சியகம் 2018ஆம் ஆண்டு முதல் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.