இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5%:உலக வங்கி
2022-06-08 10:26:20

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்பீட்டை 7.5 விழுக்காடாக குறைப்பதாகவும், 2023-2024 நிதியாண்டில் இது 7.1 விழுக்காடாகவும் குறையும் என்றும் உலக வங்கி செவ்வாய்கிழமை தெரிவித்தது. உயர்ந்து வரும் பணவீக்கம், விநியோகச் சங்கிலி பாதிப்பு மற்றும் நெருக்கமான புவியமைவு அரசியல் நிலைமை ஆகியவை இதற்கான காரணமாகும் என்று கூறப்பட்டது.

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை உலக வங்கி குறைப்பது இது 2ஆவது முறையாகும். ஏப்ரல் திங்களில் இது முன்பு கணக்கிடப்பட்டிருந்த 8.7 விழுக்காட்டிலிருந்து 8 விழுக்காடாக குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.