முஸ்லிம்களுக்கு அமெரிக்காவின் "கவலை"
2022-06-08 10:16:54

அமெரிக்கா தொடுத்துள்ள "பயங்கரவாத எதிர்ப்பு போர்" எண்ணற்ற முஸ்லிம் மக்களின் உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைந்துள்ள நிலையில், சின்ஜியாங் முஸ்லிம்கள் மீது மட்டும் என்ன "அக்கறை"? ஆனால், சின்ஜியாங்கில் உள்ள சமூகம் நிலையானதாகவும் செழிப்பாகவும் உள்ளது. பொது மக்கள் அமைதியாக வாழ்கின்ற என்ற உண்மைகள் எத்தனை பொய்களால் அழிக்கப்பட முடியாது.

இவ்வாண்டின் ஜனவரி முதல் மே வரை, சின்ஜியாங்கிலுள்ள நகரங்களில் 2 இலட்சத்து 63 ஆயிரம் வேலைகள் புதிதாக அதிகரிக்கப்படுவதுடன், முழு ஆண்டின் இலக்கின் 57.17 விழுக்காடு நிறைவேற்றப்பட்டுள்ளது. உழைப்பின் மூலம் சிறந்த வாழ்க்கை உருவாக்க முடியும். இது இன்னும் கட்டாயப்படுத்தப்பட வேண்டுமா? என்று சின்ஜியாங்கில் உள்ள பலர் சுட்டிக்காட்டினர்.

ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட பலதரப்பு சந்திப்புகளில், முஸ்லிம் நாடுகள் உள்ளிட்ட பெரும்பான்மையான நாடுகள் சீனாவின் சின்ஜியாங் கொள்கையை ஆதரித்து, சீனாவின் உள் விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.