சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு தொகை அதிகரிப்பு
2022-06-08 14:33:54

சீனத் தேசிய அந்நிய செலாவணிப் பணியகம் 7ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, மே இறுதி வரை, சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு தொகை, 3 இலட்சத்து 12 ஆயிரத்து 780 கோடி அமெரிக்க டாலராகும். இது, ஏப்ரல் திங்களை விட, 0.26 விழுக்காடு அதாவது, 810 அமெரிக்க டாலர் அதிகரித்துள்ளது. பொதுவாக, சீனாவின் அந்நிய செலாவணிச் சந்தை நிதானமாகச் செயல்படுத்தி வருகின்றது. உள்நாட்டு அந்நிய செலாவணி வழங்கல் மற்றும் தேவை அடிப்படையில் சமநிலையில் இருக்கின்றது என்று இப்பணியகத்தின் துணைத் தலைவரும் செய்தித்தொடர்பாளருமான வாங் சுன்யிங் தெரிவித்தார்.