சீனாவின் கோதுமை அறுவடை அமோகம்!
2022-06-08 10:11:07

சீன வேளாண் துறை மற்றும் கிராமப்புற அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, ஜுன் 6ஆம் நாள் வரை, சீனாவில் 2 கோடியே 75 இலட்சத்து 11 ஆயிரம் ஏகர் கோதுமை அறுவடை செய்யப்பட்டுள்ளது. குளிர்கால கோதுமை அறுவடைப் பணியிலன் 55 விழுக்காடு நிறைவேற்றப்பட்டுள்ளது என்று இது காட்டுகிறது

நாடளவில் இயந்திரத்தின் மூலம் கோதுமை அறுவடை செய்ய தொடங்கியதுடன் பல்வேறு இடங்கள் பல்வகை உத்தரவாத நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன. சீனா முழுவதிலும் கோதுமை அறுவடை பணி வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது என்று அவ்வமைச்சகத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.