பிரிக்ஸ் நாடுகளின் தொழில் மற்றும் வணிகத் துறைகளின் பயனுள்ள ஒத்துழைப்பு
2022-06-09 10:34:39

பிரிக்ஸ் நாடுகளின் தொழில் மற்றும் வணிகச் செயற்குழுவின் 2022ஆம் ஆண்டுக் கூட்டம் 8ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஐந்து நாடுகளின் செயற்குழுவைச் சேர்ந்த சுமார் 150 தொழிற்துறை பணிப் பிரதிநிதிகள் காணொளி வழியில் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். வேளாண்மை பொருளாதாரம், விமானப் போக்குவரத்து, எண்ணியல் பொருளதாரம் முதலிய 9 பணிக்குழுவின் ஆண்டு பணி அறிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் கேட்டறியப்பட்டன. பிரிக்ஸ் நாடுகளின் நெடுநோக்குக் கூட்டாளி உறவை ஆழமாக்க பல்வேறு தரப்பினர்கள் ஏற்றுக்கொண்டு, புதிய சந்தை மற்றும் வளரும் நாடுகளின் கூட்டு நலன்களைப் பேணிகாத்து பயனுள்ள ஒத்துழைப்புச் சாதனைகளை உருவாக்குவதை முன்னேற்ற வேண்டும் என்று இக்கூட்டத்தில் ஒத்த கருத்துக்கு வந்துள்ளது.