சீனாவின் வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சி எதிர்பார்ப்பை விட அதிகம்!
2022-06-09 20:17:57

இவ்வாண்டு மே திங்களில் சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 11 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று சீன சுங்கத்துறை தலைமையகம் 9ஆம நாள் வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பல பொருளியலாளர்களின் முந்தைய கணிப்பை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிட்-19 பரவல்  பாதிப்பினால், சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம்  முதல் 5 திங்களில் நிலையான வளர்ச்சியை அடைவது எளிதானதல்ல.

வெளிநாட்டு வர்த்தகமானது, சீனப் பொருளாதார வளர்ச்சியின் அறிகுறியாக பொதுவதாக கருதப்படுகிறது. இந்த துறையில் சீனா படைத்த இந்த சாதனை, சீனப் பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சியை பிரதிபலித்துக்காட்டுகிறது.

தொற்று நோயின் தாக்கம் தற்காலிகமாக மட்டுமே உள்ளது. டைனமிக் ஜீரோ கோவிட் கொள்கை,  நோய் தொற்று தடுப்பையும் பொருளாதார வளர்ச்சியையும் ஒருங்கிணைப்பது ஆகிய சீனாவின் கொள்கைகள் பயனுள்ளதாக உள்ளது என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது