மெய்ஷான் நகரில் ஷிச்சின்பிங்கின் ஆய்வுப் பயணத்தில் கவனம் குவிக்கப்பட்டவை என்னென்ன?
2022-06-09 16:37:53

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஸிச்சுவான் மாநிலத்தின் மெய்ஷென் நகரிலுள்ள ஒரு கிராமம் மற்றும் ஒரு பண்பாட்டுக் பாரம்பரிய களம் ஆகியவற்றுக்கு சென்று களஆய்வு மேற்கொண்டுள்ளார்.

யோங்ஃபெங் கிராமத்தில், விவசாய நிலங்களின் வளர்ச்சியை மேம்படுத்துதல், தானிய உற்பத்தியை அதிகரித்தல் ஆகியற்றில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 2022ஆம் ஆண்டுக்கூட்டத் தொடரில், உணவு பாதுகாப்பு, நாட்டின் பெரிய விடயமாகும் என்றும், உயர் தரமான விவசாய நிலங்களின் வளர்ச்சி இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், யோங்ஃபெங் கிராமத்தில்,  புத்துயிர் பெறும் விதமான கிராம வளர்ச்சியை ஊக்குவித்தல் முக்கியமாக ஆய்வு செய்யப்பட்ட மற்றொரு விடயமாகும். குறிப்பாக, இவ்வாண்டு ஷிச்சின்பிங் கிராமங்களில் பல முறை ஆய்வு மேற்கொண்டபோது, கிராம வளர்ச்சியை மேம்படுத்தும் பணியில் அதிக கவனம் செலுத்தியுள்ளார்.

கூடுதலாக, வரலாற்று மற்றும் பண்பாட்டுப் பாரம்பரிய பாதுகாப்பு மீது மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது. கடந்த மாதம் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், சீன தேசத்தின் தலைசிறந்த பாரம்பரியக் கலாச்சாரம், சீன நாகரிகத்தின் கருப்பொருளாகவும், சீன தேசத்தின் வேர் மற்றும் உயிராகவும் திகழ்கிறது. உலக கலாச்சார வளர்ச்சிப் போக்கில் இடம்பிடிப்பதற்கான அடிப்படையாக விளங்குகிறது என்று ஷிச்சின்பிங் கூறியுள்ளார்.