தைவான் விவகாரத்தில் தலையிடும் ஜப்பான்
2022-06-09 10:38:05

இவ்வாண்டின் கோடைக்காலத்தில், சீனாவின் தைவான் பிரதேசத்திற்கு நிரந்தர அதிகாரிகளை அனுப்ப ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. ஜப்பான் தற்காப்பு அமைச்சகம், தைவான் பற்றி கவலைப்படுவதைக் கூறி, தரை, கடல் மற்றும் வான் தற்காப்பு படைகளுக்கான தலைமையகத்தை நிறுவு உள்ளதாக ஜப்பான் செய்தி ஊடகங்கள் அண்மையில் தெரிவித்துள்ளது.

இத்தகவல்கள் உண்மையாக இருந்தால், தைவான் விவகாரத்தில் ஜப்பான் அரசு விடுத்திருக்கும் புதிய ஆபத்தான சமிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் ஆக்கிரமிப்பு போரைத் தொடுத்த ஜப்பான், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு மாபெரும் பேரிடரை விளைவித்துள்ளது. தற்போது ஜப்பானின் வலது சாரி சக்திகள், ஆசியாவில் புதிய விரிசல் மற்றும் பகைமையை கிளப்புவது குறித்து, இப்பிராந்திய நாடுகள் கடும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.