அமெரிக்காவில் கோவிட்-19 தடுப்பூசி போடுதலில் கடும் பிரச்சினை
2022-06-09 10:43:23

அமெரிக்காவில் கோவிட்-19 தடுப்பூசி போடுதலில் கடும் பிரச்சினை நிலவுகிறது என்று அந்நாட்டின் உயர்நிலை சுகாதார அதிகாரி எச்சரித்துள்ளதாக சிஎன்என் செய்தி நிறுவனம் 8ஆம் நாள் தகவல் வெளியிட்டது.

வளர்ச்சி குன்றிய பல நாடுகளிலிருந்து வேறுபட்டதாக, அமெரிக்காவில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்குத் தேவையான போதுமான டோஸ்களும், தடுப்பூசி செலுத்தும் பணியைப் பரவலாக்குவதற்கு அவசியமான உள்கட்டமைப்பும் உள்ளன. ஆனால், அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையத்தின் தரவுகளின்படி, தற்போது அமெரிக்காவில் 12 வயதுக்கு மேலான மக்களிடையில் 48.7 விழுக்காட்டினர் மட்டும் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டுள்ளனர். இவ்வெண்ணிக்கை ஒரே மாதிரியான தடுப்பூசிகளைப் பயன்படுத்தும் இதர நாடுகளில் இருந்ததை விட குறைவு என்று தெரிவிக்கப்பட்டது.