சீன-இந்திய எல்லை விவகாரம்குறித்து அமெரிக்க ராணுவ அதிகாரியின் செயல் கேவலமானது
2022-06-09 17:51:04

சீன-இந்திய எல்லை விவகாரம் குறித்து அமெரிக்க ராணுவ அதிகாரி, சீனா மற்றும் இந்தியா இடையே சிக்கல்களை ஏற்படுத்த முயல்கின்றார். இச்செயல் கேவலமாக உள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவ் லீஜியான் 9ஆம் நாள் தெரிவித்தார்.

அன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், சீன- இந்திய எல்லை குறித்து அமெரிக்க ராணுவத்தின் பசிபிக் பிராந்திய தளபதி கூறிய கருத்துக்கு பதில் அளிக்கையில் சாவ் லீஜியான் மேலும் கூறுகையில்

தற்போது  சீன-இந்திய எல்லையின் ஒட்டுமொத்த நிலைமை சீராக உள்ளது. சீன- இந்திய எல்லை விவகாரம், சீனா மற்றும் இந்தியா இடையேயான விடயாகும். கலந்தாய்வு மற்றும் பேச்சுவார்த்தை மூலம் இரு தரப்பும் தொடர்புடைய பிரச்சினைகளைக் கையாள வேண்டு. மேலும், அதற்கு திறன் உண்டு என்று குறிப்பிட்டார்.

இருப்பினும், இதனிடையில், அமெரிக்க அதிகாரி, தலையீட்டுடன்  சிக்கல்களை ஏற்படுத்தி, நிலைமையைத் தீவிரமாக்க முயல்வது போன்ற செயல் கேவலமானது. இச்செயலுக்கு மாறாக, பிராந்தியத்தின் அமைதி மற்றும் நிலைப்புத்தன்மைக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துவதில்அவர்கள் அதிகமாக ஈடுபட வேண்டும் என்று சாவ் லீஜியான் விருப்பம் தெரிவித்தார்.