கோவிட்-19 தொற்று இன்னும் கவலைப்பட வேண்டியுள்ளதா?
2022-06-09 10:44:44

10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரையான கோவிட்-19 தொற்று நீண்டகால நோய் அறிக்குறிகளை ஏற்படுத்தும். ஆனால் இதுவரை இது சரியாகக் கணக்கிடப்படவில்லை என்று அமெரிக்க மருத்துவயியல் சங்கத்தின் இதழில் அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டது.

உயர்வான நோயாளிகளின் எண்ணிக்கையை மட்டும் கருத்தில் கொண்டால் இந்த நோய்க்குப் பெரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இது டிரில்லியன் டாலர் மதிப்புள்ள கேள்வியாகும் என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சான் பிரான்சிஸ்கோ கிளையின் மருத்துவத் துறை தலைவர் பாப் வாட்சர் கூறினார்.

ஒருவருக்குக் கடுமையான நோய் பாதிப்பு ஏற்படாவிட்டாலும், சமூகத்தில் நோயாளிகள் அதிகமாக இருந்தால் வயதானவர்கள் அல்லது நோய் எதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்புகளும் அதிகம் என்பது கவலைப்பட வேண்டிய பிரச்சினையாகும்.