அண்ட்ரியன் ஜென்ஸின் போலியான அறிக்கையின் உண்மையான நோக்கம் என்ன?
2022-06-10 20:27:18

அமெரிக்காவினால் அழைக்கப்படும் உய்குர் கட்டாய தொழிலாளர் தடுப்புச் சட்டம் அமலுக்கு வருவதற்கு துணையாக செயல்படும் விதமாக, பொய் தகவல்களை உருவாக்குவதில் அதிகமாக ஈடுபட்ட அண்ட்ரியன் ஜென்ஸ் என்பவர், அண்மையில் மீண்டும் மற்றொரு போலியான அறிக்கையை வெளியிட்டார். சீனா, கட்டாய உழைப்பின் அளவை விரிவாக்கி வருகிறது என்று அந்த அறிக்கையில் அவதூறு பரப்பப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சட்டத்தில் நிறைய பொய் தகவல்கள் உள்ளன. அண்ட்ரியன் ஜென்ஸின் அறிக்கையில் முற்றிலும் கற்பனை கலந்து எழுதப்பட்டுள்ளது. சீனாவின் சின்ஜியாங்கை உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இருந்து விலக்கி நீக்கும் நோக்கத்துடன், அமெரிக்க தரப்பு பயன்படுத்தும் தந்திரம் இந்த இரண்டும் ஆகும்.

கட்டாய உழைப்பு என்றால் என்ன?  சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கட்டாய உழைப்பு உடன்படிக்கையில், எந்த விதமான தண்டனையின் மூலம் அச்சுறுத்தி, அனைத்து வேலைகளிலும் சுயவிருப்பமின்றி ஈடுபடுமாறு எவரையும் கட்டாயப்படுத்துவது என்ற வரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி  சின்ஜியாங்கில் கட்டாய உழைப்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவிலுள்ள முன்னாள் அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் பேசுகையில்,  சின்ஜியாங்கில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. அதை நாங்கள்  தெரிந்து கொண்டோம். ஆனால், சின்ஜியாங்கில் கட்டாய உழைப்பு குறித்து பரபரப்பை ஏற்படுத்தி, மனித உரிமைப் பிரச்சினையைப் பயன்படுத்தி சீனா மீது குற்றஞ்சாட்டுவது என்பது ஒரு பயனுள்ள வழியாகும். புதைகுழியில் சீன அரசை கொண்டுச் சென்று சிக்க வைப்பது தான் இறுதி நோக்கமானது என்று ஏற்றுக்கொண்டார்.

அமெரிக்க அதிகாரி உண்மையை சொன்னார். இருப்பினும், அண்ட்ரியன் ஜென்ஸ் தொடர்ந்து உண்மைக்கு புறம்பான பொய்களைத் தொடர்ச்சியாக பரப்பி வருகிறார்.