அமெரிக்க மேரிலாந்து மாநிலத்தில் துப்பாக்கிச் சூடு
2022-06-10 16:44:42

அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தின் வாஷிங்டன் வட்டத்தில் 9ஆம் நாள் ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.

துப்பாக்கி வன்முறை காப்பகம் எனும் அமெரிக்க இணையத்தளத்தில் புதிதாக வெளியான தரவுகளின்படி,  இவ்வாண்டு முதல், அமெரிக்காவில் 254 பெரிய அளவிலான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. ஒவ்வொரு சம்பவத்திலும் குறைந்தது 4 நபரின் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.