ஜுலையில் வட்டி விகிதத்தை அதிகரிக்க ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு
2022-06-10 17:13:33

வரும் ஜுலை திங்களில் வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கும் அதேவேளையில், ஜுலை முதல் நாள் தொடங்கி நிகர சொத்து கொள்முகலை இடைநிறுத்த முடிவெடுத்துள்ளதாக ஐரோப்பிய மத்திய வங்கி ஜுன் 9ஆம் நாள் அறிவித்தது.

ஐரோப்பிய மத்திய வங்கி அந்நாளில் வெளியிட்ட நாணயக் கொள்கையில், அடுத்த செப்டம்பரில் மீண்டும் வட்டி விகிதத்தை அதிகரிக்க சாத்தியம் அதிகம் என்று மதிப்படப்படுகின்றது. இடைக்கால பணவீக்கம் மேலும் மோசமாக இருந்தால், வட்டி விகிதத்தை அதிகரிக்கும் அளவு சற்று உயர்த்தப்படும் என்று செய்தி வெளியிட்டப்பட்டது.