மோசமாகி வரும் அமெரிக்க பணவீக்கம்
2022-06-10 09:58:39

அமெரிக்காவில் பெட்ரோல் விலை உள்ளூர் நேரப்படி ஜூன் 9ஆம் நாள் வரலாறு காணாத உச்சத்துக்கு உயர்ந்தது. அதே வேளையில், மே திங்களில், உணவுப் பொருட்கள் மற்றும் மளிகைகளின் இணையவழி விற்பனை விலை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 11.7 விழுக்காடு அதிகரித்து காணப்பட்டது. திட்டப்படி இந்த வார இறுதியில் அமெரிக்க அரசு வெளியிட உள்ள பணவீக்கம் மேலும் அதிகமாக இருக்கும் என்று வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் 8ஆம் நாள் தெரிவித்தார்.

வாஷிங்டன் போஸ்ட் நாளேட்டில் 9ஆம் நாள் வெளியிடப்பட்ட பொது மக்கள் கருத்து கணிப்பின் படி, பதிலளித்தவர்களில் 66 விழுக்காட்டினர் அடுத்த ஆண்டு பணவீக்கம் மேலும் மோசமாகும் என்று மதிப்பீடு செய்தனர்.