அணு ஆற்றல் நீர்மூழ்கி கப்பலுக்கான ஒத்துழைப்பு நியாயமா?
2022-06-10 11:08:12

அமெரிக்கா-பிரிட்டன்-ஆஸ்திரேலியா இடையேயான அணு ஆற்றல் நீர்மூழ்கி கப்பல் ஒத்துழைப்பில், அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கைக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் அணு பொருட்களின் ஒப்படைப்பு, அதற்கான உத்தரவாதம் மற்றும் கண்காணிப்பு ஆகிய பிரச்சினைகள் பற்றி, சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் 9ஆம் நாள் பரிசீலனை செய்துள்ளது. இது குறித்து, வியன்னாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி வாங் ஜுன் கூறுகையில், சர்வதேச சமூகம் இவ்விவகாரத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. அந்த மூன்று நாடுகள், சர்வதேச சமூகத்துக்குக் குறிப்பிடத்தக்க பதிலை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அணு ஆயுதப் பரவல் குறித்து இரட்டை வரையறை மேற்கொண்ட அமெரிக்காவும் பிரிட்டனும், ஆஸ்திரேலியாவுக்கு அப்பட்டமாக அணு ஆயுதப் பொருட்களைக் கொடுக்கின்றன. இச்செயல், சர்வதேச அணு ஆயுதப் பரவல் தடுப்பு முறைமைக்கும், ஈரான் மற்றும் வட கொரிய அணு ஆற்றல் பிரச்சினைக்கான தீர்வுக்கும் அழிவு தரும் விளைவை ஏற்படுத்தும். பல்வேறு தரப்புகள், உலகப் பாதுகாப்புக்கான முன்மொழிவைப் பின்பற்றி, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணிக்காக்க வேண்டும் என்றும் வாங் ஜுன் வேண்டுகோள் விடுத்தார்.