பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் சாதனைகள்
2022-06-10 16:45:12

எண்ணியல் பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, நிலையான வளர்ச்சி, விநியோக சங்கிலி, பலதரப்பு வர்த்தக அமைப்பு முறை உள்ளிட்ட துறைகளில் பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். 9ஆம் நாள் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர்களிடையே 12ஆவது மாநாட்டில் அமைச்சர்கள் இதற்கு ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

மேலும், பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர்களிடையே 12ஆவது மாநாட்டு கூட்டறிக்கை, விநியோக சங்கிலி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான முன்மொழிவு உள்ளிட்ட ஆவணங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டு பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது 14ஆவது மாநாட்டுக்குப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக ரீதியில் ஆயத்தம் செய்துள்ளன.