அமெரிக்காவில் தொடரும் பணவீக்கம்
2022-06-11 19:46:23

அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் 10ஆம் நாள் லாஸ் ஏஞ்சலஸில் கூறுகையில், நாடளவில் பணவீக்கம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தொடரும். அமெரிக்க மக்கள் இதனைத் தொடர்ந்து சகித்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று தெரிவித்தார். பொருட்களின் விலைகள் பொதுவாகப் பெருமளவு அதிகரிக்கும் சூழ்நிலையில், பணியாளர்களின் சம்பளம் பெரிதும் குறைந்துள்ளதோடு, பொது மக்களின் அன்றாட வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க நிதி அமைச்சர் யேல்லன் அண்மையில் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ரஷியா மீதான தடை நடவடிக்கைகளின் அதிகரிப்பு, அமெரிக்கப் பொருளாதாரத்துக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் போக்கு இதனால் மந்தமாக உள்ளது என்று தெரிவித்தார்.