உலகின் மரபுச் செல்வத் துறையில் முதலிடம் வகிக்கும் சீனா
2022-06-11 17:16:19

ஜுன் 11ஆம் நாள் சீனாவின் பண்பாடு மற்றும் இயற்கை மரபுச் செல்வத் தினமாகும். தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகத்திலிருந்து 11ஆம் நாள் கிடைத்த தகவலின்படி, தற்போதுவரை, சீனாவின் உலக இயற்கை மரபுச் செல்வங்களின் எண்ணிக்கை 14 ஆகும். இயற்கை மற்றும் பண்பாட்டு மரபுச் செல்வங்களின் எண்ணிக்கை 4 ஆகும். இவ்விரு எண்ணிக்கைகளும் உலகளவில் முதலிடத்தை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகத்தின் பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், சீனாவில் 56 உலக மரபுச் செல்வங்கள் உள்ளன. அவற்றின் மொத்த பரப்பளவு 70 ஆயிரத்து 600 சதுர கிலோமீட்டராகும். இந்த மரபுச் செல்வங்களின் மூலம், சீனத் தேசத்தில் மிகப் பெரிய பிரதிநிதித்துவம் வாய்ந்த நிலவியல் சிதிலங்கள், மிக அழகிய மலைகள், காடுகள், ஏரிகள், மிக அரிதான விலங்குகள், தாவரங்கள் ஆகியவை பயனுள்ள முறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார். மேலும், சீனாவிலுள்ள மரபுச் செல்வங்களின் பாதுகாப்பு நிலைமை சீராக இருந்து, உலகின் சராசரியை விட சிறப்பான இடத்தில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.