ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு பற்றிய 2ஆவது பல்துறை கூட்டம்
2022-06-11 16:53:49

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு பற்றிய 2ஆவது பல்துறை கூட்டம் ஜுன் 8 முதல் 10ஆம் நாள் வரை பிரிட்டனின் லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவுடன் தொடர்புடைய அம்சங்கள் குறித்து, இக்கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள் பல்வேறு கருத்துக்களை வழங்கியதுடன், இம்முன்மொழிவு ஏற்படுத்தியுள்ள செல்வாக்குகள் குறித்தும் விவாதம் நடத்தினர்.

வணிகம் மற்றும் பொருளாதாரம், அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழலின் நிலைத்தன்மை, சர்வதேச உறவுகளும் அதனுடன் தொடர்புடைய சட்டம் மற்றும் பண்பாடும் ஆகியவை இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்களாகும்.