ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் உறுப்பினராக தொர்ந்து திகழும் சீனா
2022-06-11 17:23:48

76ஆவது ஐ.நா. பொதுப் பேரவையில் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் சில உறுப்பினர்களுக்கான மறு தேர்தல் 10ஆம் நாள் நடத்தப்பட்டது. இதில், சீனா வெற்றிகரமாக உறுப்பினர் தகுநிலையை மீண்டும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் இடங்கள் பிரதேசங்களின்படி வழங்கப்படுகின்றன. ஐ.நா. பொதுப் பேரவையில் ரகசிய வாக்களிப்பின் மூலம், ஆசிய-பசிபிக், ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா மற்றும் கரீபியன், மேற்கு ஐரோப்பா மற்றும் இதரப் பிரதேசம், கிழக்கு ஐரோப்பா ஆகியவற்றைச் சேர்ந்த 17 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் 3 ஆண்டு பதவிக்காலம், 2023ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து தொடங்க உள்ளது.