அமெரிக்காவில் புதிய உச்சத்தை எட்டியுள்ள நுகர்வோர் விலைக் குறியீடு
2022-06-11 19:52:46

அமெரிக்காவின் தொழிலாளர் அமைச்சகம் 10ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, மே திங்கள் அமெரிக்காவின் நுகர்வோர் விலைக் குறியீடு ஏப்ரலில் இருந்ததை விட 1 விழுக்காடும், கடந்த ஆண்டின் மே திங்களில் இருந்ததை விட 8.6 விழுக்காடும் அதிகரித்தது. இக்குறியீட்டின் ஆண்டுக்கு ஆண்டான அதிகரிப்பு 1981ஆம் ஆண்டு டிசம்பருக்குப் பிறகு மிக அதிகப் பதிவை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

இந்தக் குறியீடு ஏமாற்றம் தருவதாய் உள்ளது. அமெரிக்காவின் பணவீக்கம் ஆபத்தான நிலையிலிருந்து மீள்வதற்கான எந்த அறிகுறியும் இன்னும் காணப்படவில்லை என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.