துப்பாக்கி வன்முறைக்கு அமெரிக்க மக்கள் எதிர்ப்பு
2022-06-12 16:02:42

அமெரிக்காவின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த மக்கள் ஜுன் 11ஆம் நாள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு மற்றும் அரசியல்வாதிகள் துப்பாக்கி வன்முறையைச் சமாளித்து, குழந்தைகளின் உயிர் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அமெரிக்காவின் துப்பாக்கி வன்முறை பதிவேடு(Gun Violence Archive)என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்ட புதிய தரவுகளின்படி, இவ்வாண்டு, குறைந்தது 4 உயிரிழப்புகளை ஏற்படுத்திய 256 துப்பாகிச்சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் நிகழ்ந்தன. 735 சிறுவர்கள் உள்ளிட்ட 19 ஆயிரத்துக்கும் மேலானோர் துப்பாக்கி வன்முறையில் உயிரிழந்துள்ளனர்.